Monday, February 04, 2013


நேற்று ஏற்பட்ட ஒரு அதிபயங்கர அனுபவம்

தங்கமணி ஊரில் இல்லாததால் வாரா வாரம் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் வேலை இல்லை. எப்போதாவது தேவைக்கு தகுந்தது போல் பால், முட்டை, பிரட் போன்றவற்றை மட்டும் வாங்கி வருவேன். நேற்று அப்படித்தான் பால் வாங்க எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு கடைக்கு சென்று இருந்தேன்.

உள்ளே நுழையும் போதே வாசலில் இருக்கும் ரெட்பாக்ஸ் கியாஸ்கில் ஒரு நாலைந்து டீனேஜ் பெண்கள் DVD வாடகைக்கு எடுத்துக் கொண்டு இருந்தார்கள். நான் அவர்களை கடக்கையில் ஒருத்தி எனது பெர்ஃபூம் வாசனையை முகர்ந்து விட்டு "Nice smell" என்றாள். நான் நன்றி கூறி, அதன் பிராண்டை சொல்லி விட்டு அவர்களை கடந்து சென்றேன்.

உள்ளே சென்று நான் பால் எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவர்கள் உள்ளே வந்து விட்டார்கள். அவர்களும் எதையோ தேடிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை நான் அப்போது கவனிக்க வில்லை. பால் எடுத்துவிட்டு ஃப்ரோஸன் சிக்கன் விங்ஸ் ஏதாவது எடுக்கலாம் என்று அந்த பகுதிக்கு செல்ல தொடங்கினேன். அப்போது தான் அவர்களை கவனித்தேன். முதலில் என்னிடம் பேசியவள் எனது அருகில் வந்து "You look cool" என்றாள். நான் வழிந்தபடி மீண்டும் நன்றி கூறிவிட்டு விலக முயன்றேன்.

அந்த நேரத்தில் நான் சற்றும் எதிர் பார்க்காத வரையில் எனது அருகே மிகவும் நெருங்கி வந்து, என்னை உரசியபடி நின்று, தனது மூச்சை நன்றாக உள் இழுத்து "It's kinda seducing. Is this a body spray or a cologne?" என்று கேட்டாள். அதுவரை எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த 'அது' சட்டென்று கட்டுக்கடங்காமல் விழித்துக் கொண்டது. நீங்கள் கண்டபடி யோசிக்கும் முன் நானே சொல்லிவிடுகிறேன். அந்த 'அது' தயிர் சாதம் தான்.

நான் அதன் பின் என்ன செய்தேன் என்பதை சொல்லும் முன்பு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இங்கே அமெரிக்காவில் டீனேஜ் பெண்கள் ஆறடி உயரத்தில் கட்டுடல் கொண்ட அமெரிக்க ஆண்களை விடுத்து தொப்பையும் தொந்தியுமாக உள்ள நம்மை போன்றவர்கள் மீது விழுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் நம் புஜ பல பராக்கிரமத்தின் மீது கொண்ட மோகம் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் உண்மையிலேயே ஒரு அப்பாவி. அவர்கள் அவ்வாறு செய்வதற்கு எனக்கு தெரிந்த ஒரு சில காரணங்கள் கீழே.


1.அவர்களுக்கு தம்மோ, இல்லை பியரோ தேவை. அதை யாராவது 21 வயது ஆனவர்கள் (தம் என்றால் 18) வாங்கிக் கொடுக்க வேண்டும்.
2.யாரோ ஒரு கேசு கிடைக்காத போலீஸ் கார நாதாரி இவர்களுக்கு காசு கொடுத்து பலி ஆடுகளை பிடிக்க அனுப்பி இருக்க வேண்டும்.
3.தனக்கு கோபமூட்டிய தனது பாய் ஃபிரண்டுக்கு எரிச்சலூட்ட அவனுக்கு முன்னால் வேறொரு ஆணிடம் அவள் ஃப்ளர்ட் செய்ய வேண்டும்.

அவர்கள் பலி ஆட்டை பிடிக்க சுற்றும் முற்றும் பார்க்கும் போது "நம்ம க்ரூப்லயே பலசாலி, புத்திசாலி, தைரியசாலி யாரு? நம்ம மன்னாரு..." என்ற ரீதியில் பேக்கு மாதிரி நம்மாட்கள் போய் சிக்கிக் கொள்வார்கள்.

சரி இப்போது நமது கதைக்கு வருவோம். எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த தயிர் சாதம் கண்டபடி விழித்துக் கொண்டதால், சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்காவது கேமராவில் எசகு பிசகாக ஏதாவது பதிவாகி போலீஸ் டீனேஜ் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி நம்மை தூக்கிக் கொண்டு போய் ஜெட்டியோடு உட்கார வைத்து கொட்டையடித்து விடுவார்களோ என்ற பயம் தான் முதலில் வந்தது.

பின்னர் சுதாசரித்துக் கொண்டு அவளிடமிருந்து சற்று விலகி "I'm more than twice your age kid" என்று கூறினேன். சொன்ன அடுத்த விநாடி அவள் என்னை ஒரு முறை வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டு விலகி சென்றாள். நானும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். நான் நடந்து வரும் போது அவர்கள் குசு குசு வென்று பேசி சிரித்துக் கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது. இரவு தங்கமணியிடம் நடந்ததை கூறினால் அவர் நம்பவே இல்லை. இவர்களும் நமது ஆணழகை புகழ மாட்டார்கள், மற்றவர்களையும் புகழ விட மாட்டார்கள். இந்த பொம்பளைங்களே இப்படித்தான், குத்துங்க எசமான் குத்துங்க........... நீங்களாவது நம்புங்க பாஸு. நான் சொன்னதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.

20 Comments:

வருண் said...

Now I can write a fictional story using your personal experience! :-)

If you get into legal trouble in America, you will experience the hell in Earth. I am glad, you "woke up" and ran away from the trouble!

துளசி கோபால் said...

:-)))))))))))))))))

SathyaPriyan said...

@டீச்சர்,

உங்களுக்கு சிரிப்பா இருக்கா? :-) எனக்கு பயத்துல கக்கா வந்துடுச்சு. வீட்டுக்கு வந்து ரொம்ப நேரத்துக்கு படபடப்பு அடங்கல.

@வருண்,

ஏதாவது ஆச்சுன்னா நம்மல பெயில்ல எடுக்க கூட ஆளு இங்க இல்ல. இந்த மாசம் 18 ஆம் தேதி தான் தங்கமணி வராங்க.

நம்பள்கி said...

Entrapment is illegal in many states; yet it is best to act as deaf mute.

[[யாரோ ஒரு கேசு கிடைக்காத போலீஸ் கார நாதாரி இவர்களுக்கு காசு கொடுத்து பலி ஆடுகளை பிடிக்க அனுப்பி இருக்க வேண்டும்.]]

Senthil Kumaran said...

ஆஹா சரியான கில்மா அனுபவமா இருக்கே............

Anonymous said...

Padichu mudicha udane ennal sirippai adakka mudiya villai.. Antha Pali Aadu picture very opt to your article.. Thanks for Sharing..

SathyaPriyan said...

//
Entrapment is illegal in many states
//
வெர்ஜீனியாவில் எப்படி என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும், குறைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழி நாய்க்கு தெரியுமா என்று கேட்பார்களே அது மாதிரி இந்த சட்ட விவகாரம் போலீஸ்காரனுக்கு தெரிய வேண்டுமே :-)

//
yet it is best to act as deaf mute
//
நல்ல அறிவுரை. நன்றி.

//
ஆஹா சரியான கில்மா அனுபவமா இருக்கே
//
கில்மா வெல்லாம் கிடையாது செந்தில். டிசியில் ஜார்ஜ் டவுனில் இருக்கும் பப்களுக்கு வெள்ளி மற்றும் சனி இரவுகளில் பெண் துணை இல்லாமல் தனியாக நாம் சென்றால் தனியாக வரும் பெண்கள் continously come and hit on us. வேண்டும் என்றால் வேண்டும் என்று சொல்ல போகிறோம், வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்ல போகிறோம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள், முடியவும் முடியாது.

இங்கே அந்த பெண் டீனேஜ் என்பதால் தான் அது ஒரு டெரர் அனுபவமானது :-)

Siva said...

Great Escape.. I would say. :)
Oru Kannam Sapala pattu irrundhalum Chapathi Aakki irrupangaa...

Koncha nalaikki Andha pakkam pogadhingaa.. :)

வடுவூர் குமார் said...

என்னது கேசுக்காக போலிஸ் நாதாரி....அங்குமா??

SathyaPriyan said...

//
Padichu mudicha udane ennal sirippai adakka mudiya villai
//
:-) எனக்கு வந்ததுனால தக்காளி சட்டினி மாதிரி தெரியுதா?

//
Great Escape.. I would say. :)
Oru Kannam Sapala pattu irrundhalum Chapathi Aakki irrupangaa...
//
இருங்க ஜீ, அடுத்த முறை பார்க்கும் போது சிவான்னு ஒரு மன்மத ராசா இங்கேயே இருக்காருன்னு சொல்லி உங்க வீட்டு பக்கம் அனுப்பி வைக்கிறேன் :-)

//
என்னது கேசுக்காக போலிஸ் நாதாரி....அங்குமா??
//
மேலே நம்பள்கி அளித்துள்ள பின்னூட்டத்தை பாருங்கள். இங்கே பல மாநிலங்களில் (குறிப்பாக ரிபப்ளிகன் மாநிலங்களில்) என்ட்ராப்மென்ட் லீகல். உங்களை அடுத்தவர் எவ்வளவு வேண்டுமானாலும் தூண்டலாம். நீங்கள் ஆனால் அதற்கு இடமளிக்க கூடாது.

உதாரணத்திற்கு போலீஸே ஒரு பெண்ணை அனுப்பி விபசாரத்துக்கு உங்களை கூப்பிடலாம், அல்லது ஆள் அனுப்பி போதை பொருட்களை உங்களிடம் விற்க முயற்சி செய்யலாம். நீங்கள் சபலப்பட்டால் கப்பென்று வந்து பிடித்து விடுவார்கள்.

SathyaPriyan said...

@ரெவெரி,

:-)

அன்று நான் உபயோகித்தது Ralph Lauren Blue. Try it. ஆனால் அந்த பெண்ணிடம் பேசிய போது மறந்து போய் Givenchy என்று கூறிவிட்டேன்.

Anonymous said...

Still waiting for someone even twice my age to say "I smell good"...

-:)

Ralph Lauren Blue//

கண்டிப்பா அடுத்த முறை மால்ல ஓசில ட்ரை பண்றேன் சத்யா..-:)

Stock said...

I too get this experience few years back. A girl around 14-15 ask me to buy a Pack of Cigarette (of course in the same way). But me the escape. Mattina you may have to pay around a grand as Fine.

ராஜ் said...

உங்க அனுபவத்துல தப்பிச்சு இருக்கீங்க போல...புது ஆடுக கண்டிப்பா மாட்டிக்கும். என்னை ஒரு "Afro American" மாடு தாம் வாங்கி தர சொல்லுச்சி, பேசாம $20 எடுத்து குடுத்துட்டு வந்துட்டே இருந்தேன்.

SathyaPriyan said...

//
I too get this experience few years back. A girl around 14-15 ask me to buy a Pack of Cigarette (of course in the same way). But me the escape. Mattina you may have to pay around a grand as Fine.
//
இது பலருக்கும் ஏற்படக்கூடிய நிகழ்வு தான். நாம் தான் சுதாசரிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

//
உங்க அனுபவத்துல தப்பிச்சு இருக்கீங்க போல...புது ஆடுக கண்டிப்பா மாட்டிக்கும். என்னை ஒரு "Afro American" மாடு தாம் வாங்கி தர சொல்லுச்சி, பேசாம $20 எடுத்து குடுத்துட்டு வந்துட்டே இருந்தேன்.
//
20$ எல்லாம் ரொம்ப ஜாஸ்திங்க. 5$ பில் ஒரு 5 எடுத்து வச்சுக்குங்க. 20$ எல்லாம் கொடுக்காதீங்க.

கிரி said...

"அன்று நான் உபயோகித்தது Ralph Lauren Blue. Try it. ஆனால் அந்த பெண்ணிடம் பேசிய போது மறந்து போய் Givenchy என்று கூறிவிட்டேன்."

ஹா ஹா ஹா

"இவர்களும் நமது ஆணழகை புகழ மாட்டார்கள், மற்றவர்களையும் புகழ விட மாட்டார்கள்."

:-))

போஸ்ட் செம ரகளையா இருக்கு :-)

உங்களுக்கு பீர் வாங்கி கொடுத்து இருக்க வேண்டிய செலவு மிச்சம்னு சந்தோசப்படுங்க :-)

கிரி said...

சொல்ல மறந்துட்டேன் அந்த ஆடு படம் வாய்ப்பே இல்லை. அருமை :-))

SathyaPriyan said...

@கிரி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

அமர பாரதி said...

பின்னனி நிறம் கறுப்பாகவும் எழுத்துகள் க்ரே நிறத்திலும் இருப்பது படிப்பதற்கு கொடுமையாக இருக்கிறது. எழுத்தில் நிறத்தையும் கறுப்பு நிறத்தில் மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்