Monday, June 16, 2008


நட்சத்திர வணக்கம்

வலையுலக நண்பர்களே!

வணக்கம்.

ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி முடியும் இந்த வாரத்தின் தமிழ்மண நட்சத்திரமாக இருக்க என்னை தமிழ்மண நிர்வாகத்தினர் அன்புடன் அழைத்துள்ளார்கள். சென்ற ஆண்டே இந்த வாய்ப்பு எனக்கு வந்தபோது அலுவல் காரணமாக என்னால் அதனை ஏற்க முடியவில்லை.

இப்பொழுது சரியாக நான் பதிவெழுத தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடியும் நேரத்தில் மீண்டும் அன்புள்ளம் கொண்டு அவர்கள் வாய்ப்பு அளிக்கும் பொழுது அதனை உடனே உவப்புடன் ஏற்றுக் கொண்டேன்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் (சரியாக ஜனவரி மாதம் 2006 ஆம் ஆண்டு) நான் அமெரிக்கா வந்த பின்னரே தமிழில் வலைப்பதிவுகள் இருப்பதை அறிந்தேன்.

இணையத்தில் தமிழினை பார்த்த உடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் முதலில் படிக்கத் தொடங்கியது டுபுக்கு அவர்களின் பதிவினை மட்டுமே. அவரின் பள்ளி கல்லூரி நாட்களின் நினைவுகள் என்னை எனது பள்ளி கல்லூரி நாட்களுக்கு கொண்டு சென்றன. அவரின் எழுத்து நடை அமரர்.சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் எழுத்து நடையை நினைவுபடுத்தின. காவிரிக்கரையில் பிறந்த நான் தாமிரபரணி மீது காதல் கொண்டேன்.

டுபுக்கு அவர்களின் பதிவிலிருந்து அங்கே இங்கே என்று அலைந்து பின்னர் நான் வந்து சேர்ந்த இடம் தமிழ்மணம். சுமார் ஆறு மாத காலம் தமிழ்மணம் மூலமாக பல பதிவுகளை படித்துக் கொண்டிருந்துவிட்டு 'நாமும் ஏன் பதிய கூடாது?' என்ற கேள்வி என்னுள் எழ ஒரு சுபயோக சுபதினத்தில் உதயமானதுதான் எனது பதிவுகள். நினைவு தெரிந்த நாள் முதல் நண்பர்கள் புடை சூழ வாழ்ந்து பழகிய என்னை அமெரிக்கா தந்த தனிமையின் பிடியிலிருந்து காப்பாற்றியது தமிழ் வலையுலகே. எனது 30 ஆண்டுகால வாழ்வின் நினைவுகளை எனது பதிவுகள் நெடுகிலும் தூவி இருக்கிறேன். இல்லையென்றால் அந்த நினைவுகளின் சுமை என்னை அழுத்தி பிசைந்து பாடாய் படுத்தி இருக்கும்.

இந்த நேரத்தில் நான் பதிவெழுத முதற்காரணமாக இருந்த டுபுக்கு அவர்களுக்கும், எனது முதல் பதிவில் வந்து முதல் பின்னூட்டம் இட்டு வாழ்த்திய குமரன் அவர்களுக்கும், தொடர்ந்து எனது பதிவுகளை எல்லாம் படித்து வாழ்த்திய/வாழ்த்திக் கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கியமாக தமிழ்மணம் மற்றும் தேன்கூடு நிர்வாகத்தினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதிவுகளின் இடப்பக்கத்தில் இருக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை சுமார் 5200 க்கு சற்று அதிகம் காட்டுகிறது (எனது அலுவலக மற்றும் இல்ல IP முகவரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது). இது சென்ற ஆண்டு எனது "முதலாம் ஆண்டு நிறைவு" பதிவிற்கு முன்னர் நான் சேர்த்தது. அந்தக் கணக்கின் படி ஒரு பதிவினை சுமார் 200 பேர் படிக்கின்றனர். இந்த எண்ணிக்கை எனக்கு மிகவும் அதிகம். இது இந்த இரண்டு திரட்டிகளினால் மட்டுமே சாத்தியமான ஒன்று.

ஒரு மாதம் முன்னதாகவே தமிழ்மண நிர்வாகத்தினர் எனக்கு இந்த நட்சத்திர வாரத்தினை பற்றி தெரியப்படுத்தி இருந்தாலும், எனது வழக்கமான சோம்பல் காரணமாக பதிவுகளை எழுதி வைத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிறு குற்றங்குறைகள் இருப்பினும் அதனை பொருட்படுத்தாது என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் எனது நட்சத்திர வாரத்தினை இன்றுடன் தொடங்குகிறேன்.

இவன்,
சத்யப்ரியன்.

31 Comments:

Athisha said...

வாழ்த்துக்கள் நண்பா....

கலக்குங்க

Athisha said...

வாழ்த்துக்கள் நண்பா....

கலக்குங்க

SP.VR. SUBBIAH said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

தமிழ் said...

வாழ்த்துக்கள்
நண்பரே

Radha Sriram said...

வாழ்த்துக்கள் சத்யா...படிக்க ஆவலா இருக்கேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள்

துளசி கோபால் said...

நட்சத்திரமே....நல்வரவு.

SurveySan said...

கலக்குங்க.

ஆனா, இந்த வாரம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.
தசா'ன்னு பதிவு பேர் இல்லன்னா, யாரும் படிக்க மாட்டாங்க :)

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :)))


திருச்சிகாரக கண்டிப்பா மலைக்கோட்டை பிள்ளையார் பத்தி சொல்லுவீங்கன்னு ஒரு மனக்கோட்டை கட்டி காத்திருக்கிறேன் :)))

ஆயில்யன் said...

பின்னூட்டம் அல்ல :)


யோசனையாக...!

நட்சத்திர வாரத்தில் தற்காலிமாகவாவது தங்களின் கருப்பு பேக்கிரவுண்ட் டெம்ப்ளட்டை மாற்றி வைத்துப்பாருங்களேன் :))

நாஞ்சில் பிரதாப் said...

உங்கள் பதிவுகளை நானும் படித்துள்ளேன்...மேன்மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

Jayakumar said...

நட்சத்திர வார வாழ்த்துகள்.

அன்புடன்
ஜேகே

வெற்றி said...

சத்தியப்பிரியன்,
நட்சத்திரக் கிழமை வாழ்த்துக்கள்.

Divya said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சத்யா!!

Divya said...

நட்சத்திர வாரம் உங்கள் படைப்புகளால் ஜொலிக்கட்டும். ...சத்யா!!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;))

கலக்குங்க ;))

SathyaPriyan said...

//
அதிஷா said...
வாழ்த்துக்கள் நண்பா....

கலக்குங்க
//
மிக்க நன்றி அதிஷா.

//
SP.VR. SUBBIAH said...
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!
//
மிக்க நன்றி வாத்தியார் ஐயா.

//
திகழ்மிளிர் said...
வாழ்த்துக்கள்
நண்பரே
//
மிக்க நன்றி திகழ்மிளிர்.

//
Radha Sriram said...
வாழ்த்துக்கள் சத்யா...படிக்க ஆவலா இருக்கேன்.
//
நன்றி Radha.

//
கயல்விழி முத்துலெட்சுமி said...
வாழ்த்துகள்
//
நன்றி கயல்விழி முத்துலெட்சுமி.

//
துளசி கோபால் said...
நட்சத்திரமே....நல்வரவு.
//
நன்றி துளசி மேடம்.

SathyaPriyan said...

//
SurveySan said...
கலக்குங்க.
//
நன்றி SurveySan.

//
ஆனா, இந்த வாரம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.
தசா'ன்னு பதிவு பேர் இல்லன்னா, யாரும் படிக்க மாட்டாங்க :)
//
அப்படீங்கறீங்க? நான் படம் நாளை தான் பார்க்கப் போகிறேன். பார்த்து விட்டு ஒரு பதிவு போட்டால் போகிறது :-)

//
ஆயில்யன் said...
நட்சத்திர வாழ்த்துக்கள் :)))
//
நன்றி ஆயில்யன்.

//
திருச்சிகாரக கண்டிப்பா மலைக்கோட்டை பிள்ளையார் பத்தி சொல்லுவீங்கன்னு ஒரு மனக்கோட்டை கட்டி காத்திருக்கிறேன் :)))
//
முன்னரே இரு வேறு பதிவுகளில் அதனை பற்றி சொல்லி இருக்கிறேனே.

திருச்சி பற்றிய முழூ பதிவும் பதிந்துள்ளேன்.

//
ஆயில்யன் said...
பின்னூட்டம் அல்ல :)

யோசனையாக...!

நட்சத்திர வாரத்தில் தற்காலிமாகவாவது தங்களின் கருப்பு பேக்கிரவுண்ட் டெம்ப்ளட்டை மாற்றி வைத்துப்பாருங்களேன் :))
//
அடடா படிக்க கடினமாக இருக்கின்றதா? அதனை மாற்ற முயற்சிக்கிறேன்.

SathyaPriyan said...

//
நாஞ்சில் பிரதாப் said...
உங்கள் பதிவுகளை நானும் படித்துள்ளேன்...மேன்மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி நாஞ்சில் பிரதாப்.

//
ஜேகே - JK said...
நட்சத்திர வார வாழ்த்துகள்.

அன்புடன்
ஜேகே
//
மிக்க நன்றி ஜேகே.

//
வெற்றி said...
சத்தியப்பிரியன்,
நட்சத்திரக் கிழமை வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி வெற்றி.

//
Divya said...
நட்சத்திர வாழ்த்துக்கள் சத்யா!!

நட்சத்திர வாரம் உங்கள் படைப்புகளால் ஜொலிக்கட்டும். ...சத்யா!!
//
மிக்க நன்றி Divya.

//
கோபிநாத் said...
வாழ்த்துக்கள் தல ;))
//
நன்றி தல.

மயிலாடுதுறை சிவா said...

வாழ்த்துக்கள்!

தினமும் உங்கள் பதிவுகளை படிக்க ஆவலாக உள்ளேன்...

மயிலாடுதுறை சிவா...

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் சத்யப்ரியன்.

Ramya Ramani said...

நட்சத்திர பதிவராக எப்பொழுதும் போல் நல்ல பதிவுகளை அளிக்க வேண்டுகிரோம் :)வாழ்த்துக்கள்!

SathyaPriyan said...

//
மயிலாடுதுறை சிவா said...
வாழ்த்துக்கள்!

தினமும் உங்கள் பதிவுகளை படிக்க ஆவலாக உள்ளேன்...
//
நன்றி சிவா.

//
குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் சத்யப்ரியன்.
//
நன்றி குமரன். வெகு நாட்களுக்கு பின்னர் எனது பதிவுகள் பக்கம் வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

//
Ramya Ramani said...
நட்சத்திர பதிவராக எப்பொழுதும் போல் நல்ல பதிவுகளை அளிக்க வேண்டுகிரோம் :)வாழ்த்துக்கள்!
//
மிக்க நன்றி Ramya.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் நண்பரே...

மங்களூர் சிவா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சத்யப்ரியன்.

SathyaPriyan said...

//
தமிழன்... said...
வாழ்த்துக்கள் நண்பரே...
//
மிக்க நன்றி தமிழன்.

//
மங்களூர் சிவா said...
நட்சத்திர வாழ்த்துக்கள் சத்யப்ரியன்.
//
நன்றி சிவா.

கிரி said...

வாழ்த்துக்கள் சத்யா பிரியன்.

நட்ச்சத்திர பதிவு போட்டதோட..கலக்கலாக கமலை பற்றிய ஒரு பதிவும் போட்டு அசத்திட்டீங்க. தொடர்ந்து எழுதுங்க.

உங்க எழுத்து நடை அழகாக இருக்கிறது

அன்புடன்
கிரி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தாமதம் தான் எனினும்...
நட்சத்திர வாழ்த்துக்கள் சத்யப்ரியன்!
தசா புயல் அடிச்சா என்ன? சத்யப் புயல் முன் அசினே பறந்துட மாட்டாங்களா என்ன? :-)

கலக்குங்க!

//இவன்,
சத்யப்ரியன்//

சத்யா,
இவனா? இவணா??

SathyaPriyan said...

//
கிரி said...
வாழ்த்துக்கள் சத்யா பிரியன்.
//
நன்றி கிரி.

//
உங்க எழுத்து நடை அழகாக இருக்கிறது
//
மிக்க மகிழ்ச்சி. உங்களை போன்றவர்கள் தொடர்ந்து கொடுக்கும் ஊக்கமே காரணம்.

//
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
தாமதம் தான் எனினும்...
நட்சத்திர வாழ்த்துக்கள் சத்யப்ரியன்!
//
நன்றி KRS.

//
தசா புயல் அடிச்சா என்ன? சத்யப் புயல் முன் அசினே பறந்துட மாட்டாங்களா என்ன? :-)
//
அப்படீங்கறீங்க? எனக்கு நம்பிக்கை இல்லை :-) அதனால் நானும் ஒரு தசா பதிவு போட்டு கல்லா கட்டி விட்டேன்.

CVR said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :D

SathyaPriyan said...

//
CVR said...
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :D
//
நன்றி தல.