Sunday, June 22, 2008


நட்சத்திர நன்றி

பதிவெழுத தொடங்கி இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். இரண்டாண்டுகளில் சரியாக 62 பதிவுகள் பதிந்துள்ளேன். ஆனாலும் உண்மையில்

"கண்களையும் காதுகளையும் அதிகம் பயன்படுத்து
வாயின் பயன்பாட்டினை குறைத்துக்கொள்"

என்று எங்கேயோ ஆட்டோவின் பின்னால் படித்த வாசகத்தினை பின்பற்றி இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. நான் எழுதியது 62 தான் என்றாலும், பல நூறு பதிவுகளை இத்துனை காலம் படித்து இருக்கிறேன். அதன் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். பல சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை வலுப்பட்டிருக்கின்றது. பல சித்தாந்தங்களின் மீது நான் வைத்த நம்பிக்கை குறைந்துள்ளது. சிந்தனை தெளிவு அதிகமாகி இருக்கிறது. ஒரு நிகழ்வை பல பரிமாணங்களில் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்.

இவ்வளவு இருந்தும் இன்னும் சிறிது சுயமோகமும், விளம்பர இச்சையும் மீதம் இருப்பதால் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்ற அடிப்படையில் எனது பதிவுகளில் நான் மிகவும் விரும்பிய பதிவுகளை தொகுத்து தந்துள்ளேன். இந்த பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் மன நிறைவை தந்தவை.

1. குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்!

நேதாஜியை பற்றி நான் எழுதிய பதிவு. அவரது வரலாற்றை படிக்கும் பொழுது தான் நமது சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் சிந்திய குருதியும், இன்று இந்த சுதந்திரத்தை அனுபவிக்க நம்மை தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

2. இந்தியப் போர்கள்

இந்தியப் போர்களை பற்றிய எனது தொடர் பதிவு. உண்மையில் இதனை எழுது பொழுது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கடைசி பகுதிக்கு வந்திருந்த பின்னூட்டங்களின் மூலம் இதனை இத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வலைபதிவில் மட்டும் இல்லாது தனிப்பட்ட முறையில் பல நண்பர்களிடமிருந்தும் நான் பாராட்டு பெற்றேன். இந்த தொடரினை எழுதும் பொழுது தொடர்ந்து படித்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்திய கேமரா கவிஞர் CVR மற்றும் சேரன் பார்வை இருவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

3. அழகுகள் ஆறு!

திருச்சியை பற்றிய எண்ணமே எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கும் ஒன்று. அப்படி இருக்கும் பொழுது முதல் முறையாக திருச்சியின் மலைக் கோட்டையை பற்றியும் காவிரி பாலத்தினை பற்றியும் எழுதிய இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் இருப்பதில் வியப்பென்ன? பின்னாளில் திருச்சியினை பற்றிய முழூ பதிவொன்று எழுதுவதற்கு இந்த பதிவே ஊக்கமாக அமைந்தது.

4. கமல் - ஒரு சகாப்தம்

நான் இதுவரை எழுதிய பதிவுகளிலேயே அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவு. தமிழ் சினிமாவினை passion ஆக கொண்டிருக்கும் சராசரி தமிழனான எனக்கு நான் மிகவும் விரும்பும் கலைஞனின் சிறந்த படங்களை தொகுத்து அளிப்பது சவாலான ஒரு செயலாக இருந்தது. எனக்கும் கமல் மீது பல விமர்சனங்கள் உண்டு என்ற போதும் அவரது திரைபடங்களின் தாக்கம் அதிகம் என் மீது இருப்பதால் வந்த விளைவே இந்தப் பதிவு.

இத்துடன் விளம்பரம் போதும் என்று நினைக்கிறேன். எனது நட்சத்திர வாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஒரு வார காலமாக எனது பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாய்ப்பினால் பல பதிவர்கள் முதன்முறை எனது பதிவுகளுக்கு வருகை தந்துள்ளனர். பல பழைய பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வந்துள்ளன. அது எனது மன மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறது.

இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேனா?, இல்லையா? என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் என்றாலும், ஓரளவு அனைவரையும் ஏமாற்றாமல் இருந்திருக்கிறேன் என்றே நான் நினைக்கிறேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்மண நிற்வாகத்தினர்களுக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்த வார தமிழ்மண நட்சத்திர பதிவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி. வணக்கம்.

13 Comments:

ambi said...

me the first..? :))

தமிழ்மன வாரத்தில் மிக அழகாக எழுதியுள்ளீர்கள். உங்களது போர்கள் பற்றிய பதிவுகள் மிக அருமை. இதை போல சுவாரசியமான இன்னொரு தொடரை எதிர்பார்க்கிறோம்.

Nimal said...

இன்று தான் உங்களின் அனைத்து நட்சத்திர பதிவுகளையும் வாசித்தேன்.

உங்கள் எழுத்துக்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. எல்லாவற்றுக்கும் பொதுவாக வாழ்த்துகள்...!

மங்களூர் சிவா said...

/
"கண்களையும் காதுகளையும் அதிகம் பயன்படுத்து
வாயின் பயன்பாட்டினை குறைத்துக்கொள்"
/

அதுக்காக ரொம்பவும் குறைச்சிடாதீங்க!!!!

நட்சத்திர வாரம் முடிவடைந்தாலும் அதிரடி பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்!

வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள்! SathyaPriyan
இந்த வலைபூ உலகத்தில் நான் புதியவன். உங்கள் பதிவு எதார்த்தமாகவும், திடமான கொள்கையும் தெரிகிறது. தொடர்ந்து பதியுங்கள் / வாழ்த்துக்கள்....

மயிலாடுதுறை சிவா said...

வாழ்த்துக்கள் சத்ய ப்ரியன்

உங்களிடன் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்....போக போக இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்....

மயிலாடுதுறை சிவா...

கோபிநாத் said...

தல

அருமையான தொரு வாரம் தல...;)

வாழ்த்துக்கள் ;)

தமிழன்-கறுப்பி... said...

நல்லதொரு வாரம்...
தொடர்ந்து கலக்குங்க!

வாழ்த்துக்கள்...

Ramya Ramani said...

வாழ்த்துக்கள் சத்ய ப்ரியன்.தமிழ்மன வார பதிவுகள் அருமை :)

SathyaPriyan said...

//
ambi said...
me the first..? :))
//
உக்களுக்கு ஒரு புளியோதரை பார்சல்.

//
தமிழ்மன வாரத்தில் மிக அழகாக எழுதியுள்ளீர்கள். உங்களது போர்கள் பற்றிய பதிவுகள் மிக அருமை. இதை போல சுவாரசியமான இன்னொரு தொடரை எதிர்பார்க்கிறோம்.
//
நன்றி அம்பி. Greek Mythology பற்றிய ஒரு தொடர் எழுதும் முயற்சியில் இருக்கிறேன். தேவையான தகவல்கள் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

//
நிமல்/NiMaL said...
இன்று தான் உங்களின் அனைத்து நட்சத்திர பதிவுகளையும் வாசித்தேன்.

உங்கள் எழுத்துக்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. எல்லாவற்றுக்கும் பொதுவாக வாழ்த்துகள்...!
//
மிக்க நன்றி நிமல்.

//
மங்களூர் சிவா said...
நட்சத்திர வாரம் முடிவடைந்தாலும் அதிரடி பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்!

வாழ்த்துக்கள்.
//
வாரம் முழுதும் வந்து தொடர்ந்து ஊக்கப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி சிவா.

//
ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துக்கள்! SathyaPriyan
இந்த வலைபூ உலகத்தில் நான் புதியவன். உங்கள் பதிவு எதார்த்தமாகவும், திடமான கொள்கையும் தெரிகிறது. தொடர்ந்து பதியுங்கள் / வாழ்த்துக்கள்....
//
மிக்க நன்றி ஞானசேகரன்.

SathyaPriyan said...

//
மயிலாடுதுறை சிவா said...
வாழ்த்துக்கள் சத்ய ப்ரியன்
//
நன்றி சிவா.

//
உங்களிடன் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்....போக போக இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்....
//
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் :-)
ரூம் பொட்டு குவாட்டர் விட்டு யோசிச்சாலும் ஒன்னும் தேறமாட்டேங்குதே.....

//
கோபிநாத் said...
தல

அருமையான தொரு வாரம் தல...;)

வாழ்த்துக்கள் ;)
//
நன்றி தலைவா.

//
தமிழன்... said...
நல்லதொரு வாரம்...
தொடர்ந்து கலக்குங்க!

வாழ்த்துக்கள்...
//
மிக்க நன்றி தமிழன்.

//
Ramya Ramani said...
வாழ்த்துக்கள் சத்ய ப்ரியன்.தமிழ்மன வார பதிவுகள் அருமை :)
//
நன்றி Ramya.

Vetirmagal said...

Superb.. Please write more.. 62 is too less for this mature writing..

God bless

DHANS said...

இந்திய போர்களை பற்றி தெரிந்து கொண்டேன், மிக அற்புதமான பதிவு, நன்றாக இருந்தது.

SathyaPriyan said...

//
Vetrimagal said...
Superb.. Please write more.. 62 is too less for this mature writing..
//
Thank you Vetrimagal.

அதிகம் பதிய முயற்சி செய்கிறேன். நீங்களும் அதிகம் பதியலாமே.

//
Dhans said...
இந்திய போர்களை பற்றி தெரிந்து கொண்டேன், மிக அற்புதமான பதிவு, நன்றாக இருந்தது.
//
நன்றி Dhans.