Thursday, June 26, 2008


பொடிமாஸ் - 06/26/2008

எனது தமிழ்மண நட்சத்திர வாரம் முடிவிற்கு வந்து விட்டது. அதனை தொடர்ந்து எனக்கு தொலைபேசிய நண்பர் ஒருவர் ஏமாற்றமாக இருந்ததாகவும் அதனை நான் இன்னும் அதிகம் நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். அது அவர் என் மீது கொண்டுள்ள அன்பை காட்டுகிறது. ஆனாலும் நான் என்ன செய்வது?, "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?"அமெரிக்க மக்களின் ஒழுங்கு முறை பற்றி பல இடங்களில் படித்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள். நேரில் பார்க்காத மக்களுக்கு தான் இதனை எடுத்து சொல்ல இருக்கிறார்களே வெளி நாட்டு மாப்பிள்ளைகளும், மகன்கள்/மகள்கள் வீட்டிற்கு அமெரிக்கா வந்து திரும்பும் ரிட்டையர்டு பெரிசுகளும். ஆனால் சென்ற மாதம் இதற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது.

Washington, DC மற்றும் Virginia இடையிலான பாதாள ரயில் போக்குவரத்தில் ஏதோ பிழை ஏற்பட்டு அதனால் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஒரு பக்கம் வரும் ரயில்கள் பயணிகளை ஒரு நிலையத்தில் இறக்கிவிட, அங்கிருந்து அவர்களை பேரூந்தில் மற்றொரு ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து மீண்டும் ரயிலில் பயணம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் ஒரு ரயிலில் வரும் பயணிகள் அனைவரையும் ஒரு பேரூந்தில் ஏற்றவா முடியும். அதனால் சுமார் 3000 அல்லது 4000 பயணிகள் வரை ஒரு நிலையத்தில் காத்திருக்க பயணிகளை ஏற்ற வரும் பேரூந்தோ நெடுநேரம் சென்றும் வரவே இல்லை.

அப்பொழுது அங்கே இருந்த தள்ளு முள்ளுவை பார்க்க வேண்டுமே. ஆஹா கண்கொள்ளா காட்சி.

Demand Vs. Supply என்பது சரிவிகிதமாக இருக்கும் வரை அமெரிக்கர்கள் ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றுபவர்களே. ஆனால் அதில் ஒரு சிறு பாதிப்பு வந்தாலும் அவர்களின் ஒழுங்கீனம் நம்மவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. அதே நேரத்தில் Demand Vs. Supply விகிதத்தை சரியளவில் நம்மவர்களுக்கு அளித்தால் நம்மவர்களும் ஒழுங்கு முறைகளை சரியாகவே பின்பற்றுவார்கள். அதனை செய்வதை விட்டு விட்டு பேரூந்தில் வரிசையில் ஏறுங்கள் என்று பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருந்தால் எந்த மாற்றமும் நடக்காது. ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு அந்நியன் படம் எடுத்து காசு பார்க்கவே பயன்படும்.இந்த ஹிந்திக்காரர்களிடம் பழகுவது என்பது தனி கலை என்றே நினைக்கிறேன். முன்பு இந்தியாவில் இருந்த பொழுது எனக்கிருந்த வட நாட்டு நண்பர்கள் அனைவரும் திருமணமாகாதவர்கள் என்பதால் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. May be we did not talk anything other than cricket and movies then.

இங்கும் நான் வந்த புதிதில் அவ்வளவாக வடநாட்டினர் எனது அலுவலகத்தில் இல்லை (சரியாக சொன்னால் இல்லவே இல்லை). ஆனால் இப்பொழுது திடீரென்று நான்கைந்து வட நாட்டினரை வேலைக்கு எடுத்துவிட்டார்கள்.

10 நிமிடம் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தால் 9 முறை 'பணம்' வந்து விடுகிறது. இது எனக்கு எரிச்சலையே தருகிறது. "டேய்! சாகும் போது அள்ளிக்கிட்டாடா போகப்போறீங்க?" என்று கத்த வேண்டும் போல் உள்ளது.

அடுத்தது மொழி. எனக்கு ஹிந்தி தெரியாது என்று நாளிதழில் தான் விளம்பரம் செய்யவில்லை. அவ்வளவு முறை கூறியாகி விட்டது. இனி என்னிடம் ஹிந்தியில் பேசினால் தமிழில் பதில் கூறுவதாக முடிவெடுத்துள்ளேன். பார்க்கலாம்.

இதனை எழுதும் பொழுது நான் இந்தியாவில் வேலை செய்த பொழுது நடந்தது தான் நினைவிற்கு வருகிறது. வேலைக்கு சேர்ந்த புதிதில் Swapnil என்ற ஒரு ***** என்னிடம் ஹிந்தியில் ஏதோ கேள்வி கேட்டான். அதற்கு நான் எனக்கு ஹிந்தி தெரியாது என்றும் ஆங்கிலத்தில் பேசுமாறும் மரியாதையாக பதில் கூறினேன். அதற்கு அவன்,

"Why the fuck you are in India when you don't know Hindi?" என்றான். எனக்கு வந்ததே கோபம். நான் "Do you dare to send me your question in email? I will show you why the fuck I am here." என்றேன். அதை கேட்டு வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சென்றவன் தான். அதன் பிறகு என்னிடம் வருவதில்லை.இந்த தசாவதார மோகம் என்று முடிவிற்கு வரும் என்றே தெரியவில்லை. சீக்கிரம் குசேலனை வெளியிட்டால் பரவாயில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.

"பேப்பரை கிழித்து துகள்களை தூக்கி வீசி விசிலடிக்கும் முன்வரிசை ரசிகர்களுக்காக படமெடுத்து விட்டு உலகத்தரம் என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்....." என்றெல்லாம் வரும் கருத்துக்களை பார்க்கும் பொழுது ஒன்றே ஒன்று தான் கூறத் தோன்றுகிறது.

அடுத்தவர் ரசனையை மட்டம் என்று நினைப்பதை விட மட்டம் வேறு இருக்கவே முடியாது. இந்தியா போன்ற சமூகத்தில் தனிப்பட்ட, அரசியல், சமூக பிரச்சனைகள் பலவற்றை நாள் தோறும் சந்திக்கும் முன்வரிசை ரசிகனை மகிழ்விப்பதை விட வேறு உயரிய வேலை ஒரு கலைஞனுக்கு இல்லை.

அதே காரணத்திற்காகவே கமலை நான் எவ்வளவு மதிக்கிறேனோ அதே அளவு ரஜினியையும் மதிக்கிறேன்.

மற்றபடி முன் வரிசை ரசிகனின் ரசனையை மட்டம் தட்டும் அறிவு ஜீவிகளுக்கெல்லாம் ஒன்றே ஒன்று தான் சொல்லிக் கொள்கிறேன் உங்கள் கூற்றுப்படி அவன் மட்டமான ரசனையுடன் இருப்பதினால் தான் உங்களால் "அறிவு ஜீவி" பட்டத்தை எளிதில் பெற முடிகிறது. அவர்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை என்பது முன்வரிசை ரசிகர்களுள் ஒருவனான எனது தாழ்மையான கருத்து.

37 Comments:

வேளராசி said...

அமெரிக்காவில் புயல் தாக்கியபோது கடைகளில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ஒடினர்.ஆனால் இங்கோ சுனாமி தாக்கியபோது எல்லாரும் சாப்பாடு துணி என வரிந்துகட்டி அனுப்பினர்.

மங்களூர் சிவா said...

/
Demand Vs. Supply என்பது சரிவிகிதமாக இருக்கும் வரை அமெரிக்கர்கள் ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றுபவர்களே. ஆனால் அதில் ஒரு சிறு பாதிப்பு வந்தாலும் அவர்களின் ஒழுங்கீனம் நம்மவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. அதே நேரத்தில் Demand Vs. Supply விகிதத்தை சரியளவில் நம்மவர்களுக்கு அளித்தால் நம்மவர்களும் ஒழுங்கு முறைகளை சரியாகவே பின்பற்றுவார்கள். அதனை செய்வதை விட்டு விட்டு பேரூந்தில் வரிசையில் ஏறுங்கள் என்று பிரச்சாரம் மட்டும் செய்து கொண்டிருந்தால் எந்த மாற்றமும் நடக்காது. ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு அந்நியன் படம் எடுத்து காசு பார்க்கவே பயன்படும்.
/

நல்லா சொல்லிருக்கீங்க!

:)

பதிவு அருமை.

SathyaPriyan said...

//
வேளராசி said...
அமெரிக்காவில் புயல் தாக்கியபோது கடைகளில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ஒடினர்.ஆனால் இங்கோ சுனாமி தாக்கியபோது எல்லாரும் சாப்பாடு துணி என வரிந்துகட்டி அனுப்பினர்.
//
கருத்திற்கு நன்றி வேளராசி.

முதல் வருகை என்று நினைக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

//
மங்களூர் சிவா said...
நல்லா சொல்லிருக்கீங்க!

பதிவு அருமை.
//
மிக்க நன்றி சிவா.

பெத்தராயுடு said...

Disclaimer: I'm not stereotyping any race.

Latinos and African Americans ransacking and stealing stores/malls (in big cities like LA)is a perennial topic for standup comedians like Carlos Menica.

Ramya Ramani said...

நீங்கள் சொல்வது போல ஹிந்தி தெரியாவிட்டால் , "நீ இந்தியன் தானே" என்று கேட்கும் பழக்கம் அதிகம் இருக்கிறது.India is a very diverse country with people speakingso many languages still they expect everyone to know hindi. வட மாநிலங்களுக்கு செல்லும் பொது ஹிந்தி மொழி தேவை என்றாலும்,பேசவோ படிக்கவோ தெரியாதவர்களை ஏளனமாக பார்ப்பதை நிருத்தவேண்டும்.

http://horizonwitinus.blogspot.com/2008/06/respect-passion.html இதில் தீபா அவர்கள் "Respect the Passion" என்பதை பற்றி கூறி இருக்கிறார். ஆனால் நம்மில் நெரைய்ய பேருக்கு மற்றவரின் விருப்பத்தை ஏற்கவோ,ரசனையை மதிக்கவோ மனதில்லை

வெட்டிப்பயல் said...

எல்லாமே சூப்பரா எழுதியிருக்கீங்க...

மொத்தத்தில் பதிவு சூப்பர்...

HindiVsLocal Lang (Kannada, Tamil) இன்னும் இது தான் BBல டாபிக்கே :-)

சிறில் அலெக்ஸ் said...

supply demand logic அருமை

SathyaPriyan said...

//
பெத்த ராயுடு said...
Disclaimer: I'm not stereotyping any race.

Latinos and African Americans ransacking and stealing stores/malls (in big cities like LA)is a perennial topic for standup comedians like Carlos Menica.
//
வாங்க பெத்த ராயுடு.

இதையெல்லாம் யாராவது அங்கு சென்று தெரியப்படுத்தினால் தானே. அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்லும் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று தானே கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேடி அலைகிறார்கள்.

வருகைக்கு நன்றி.

//
Ramya Ramani said...
நீங்கள் சொல்வது போல ஹிந்தி தெரியாவிட்டால் , "நீ இந்தியன் தானே" என்று கேட்கும் பழக்கம் அதிகம் இருக்கிறது.
//
ஆமாம் Ramya. வடநாட்டவர்கள் தான் இதனை அதிகம் செய்கிறார்கள்.

மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்கள் ஓரளவு நம்மை புறிந்து கொள்கிறார்கள்.

//
India is a very diverse country with people speakingso many languages still they expect everyone to know hindi.
//
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

//
http://horizonwitinus.blogspot.com/2008/06/respect-passion.html இதில் தீபா அவர்கள் "Respect the Passion" என்பதை பற்றி கூறி இருக்கிறார்.
//
பதிவினை படித்துவிட்டு வருகிறேன்.

//
ஆனால் நம்மில் நெரைய்ய பேருக்கு மற்றவரின் விருப்பத்தை ஏற்கவோ,ரசனையை மதிக்கவோ மனதில்லை
//
உனது ரசனை மட்டம், எனது ரசனை உயர்ந்தது என்று கூறுவது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை.

வருகைக்கு நன்றி Ramya.

SathyaPriyan said...

//
வெட்டிப்பயல் said...
எல்லாமே சூப்பரா எழுதியிருக்கீங்க...

மொத்தத்தில் பதிவு சூப்பர்...
//
நன்றி வெட்டி.

//
HindiVsLocal Lang (Kannada, Tamil) இன்னும் இது தான் BBல டாபிக்கே :-)
//
ஆஹா அவங்க இன்னும் திருந்தலையா? நல்லா பொழுது போகுமே.

I am missing it.

அந்த Bangloreans Vs. Non-Bangaloreans சண்டை இன்னும் நடக்குதா? ஏதாவது குத்தம் சொன்னா Get out of my city அப்படீன்னு சொல்றது ஒரு standard reply.

ஒரு தடவை இது மாதிரி சொல்றவங்களை "Against constitutional rights" அப்படீன்னு ஒரு கேஸ் போட்டு நாயா பேயா கோர்ட்டுக்கு அலையவிட்டா அடங்குவாங்க :-)

//
சிறில் அலெக்ஸ் said...
supply demand logic அருமை
//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சிறில் அலெக்ஸ்.

மயிலாடுதுறை சிவா said...

நல்ல பதிவு சத்யப்ரியன்!

"ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு அந்நியன் படம் எடுத்து காசு பார்க்கவே பயன்படும்...."

"அதே காரணத்திற்காகவே கமலை நான் எவ்வளவு மதிக்கிறேனோ அதே அளவு ரஜினியையும் மதிக்கிறேன்..."

உங்கள் ஸ்டைல் இதில் உள்ளது!

மயிலாடுதுறை சிவா...

வெட்டிப்பயல் said...

//ஆஹா அவங்க இன்னும் திருந்தலையா? நல்லா பொழுது போகுமே.

I am missing it.

அந்த Bangloreans Vs. Non-Bangaloreans சண்டை இன்னும் நடக்குதா? ஏதாவது குத்தம் சொன்னா Get out of my city அப்படீன்னு சொல்றது ஒரு standard reply.//

அது எப்பவுமே நடக்கறது தான்... அது நிக்கவே நிக்காது. அதுவும் கமல், ரஜினி படம் வந்தா யாரு சூப்பர் ஆக்டர்னு ஆரம்பிச்சி, மறுபடியும் அதே இடத்துல வந்துடும் :-)


//ஒரு தடவை இது மாதிரி சொல்றவங்களை "Against constitutional rights" அப்படீன்னு ஒரு கேஸ் போட்டு நாயா பேயா கோர்ட்டுக்கு அலையவிட்டா அடங்குவாங்க :-)//
கம்பெனி விஷயத்தை வெளியே சொல்ல முடியாதே :-)

மோகன் கந்தசாமி said...

சத்யப்ப்ரியன்,
இந்தி காரர்களின் அலும்பு பற்றி என் அனுபவத்தை இங்கு பாருங்கள்.

வெள்ளையரின் ஒழுங்கீனம் சற்றும் சளைத்ததல்ல என்பது உண்மை.

அந்த வலைப்பூவில், தசாவதாரம் பற்றிய விவாதத்தில் ஆரம்பத்திலே உஷாராகி அழகாக எஸ்கேப் ஆகிவிட்டீர்கள். நாந்தான் அந்த மெண்டல் ஆஸ்பிட்டலில் இருந்து காம்போவுண்டு எகிறி குதிச்சு வரவேண்டியதா போச்சு.

சின்னப் பையன் said...

//எல்லாமே சூப்பரா எழுதியிருக்கீங்க...

மொத்தத்தில் பதிவு சூப்பர்...
//

ரிப்பீட்டே....

SathyaPriyan said...

//
மயிலாடுதுறை சிவா said...
நல்ல பதிவு சத்யப்ரியன்!
//
நன்றி சிவா.

//
"ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு அந்நியன் படம் எடுத்து காசு பார்க்கவே பயன்படும்...."

"அதே காரணத்திற்காகவே கமலை நான் எவ்வளவு மதிக்கிறேனோ அதே அளவு ரஜினியையும் மதிக்கிறேன்..."

உங்கள் ஸ்டைல் இதில் உள்ளது!
//
என்னங்க நீங்க ஏதோ பாலசந்தர் டச் ரஜினி ஸ்டைல் மாதிரி சொல்றீங்க. மிக்க நன்றி.

//
வெட்டிப்பயல் said...
அது எப்பவுமே நடக்கறது தான்... அது நிக்கவே நிக்காது. அதுவும் கமல், ரஜினி படம் வந்தா யாரு சூப்பர் ஆக்டர்னு ஆரம்பிச்சி, மறுபடியும் அதே இடத்துல வந்துடும் :-)
//
கஷ்டம் :-)))))

//
கம்பெனி விஷயத்தை வெளியே சொல்ல முடியாதே :-)
//
இத பார்க்கும் போது எனக்கு பிதாமகன் படத்துல கம்பெனின்னு சூர்யா சொல்றது தான் நியாபகம் வருது :-)

SathyaPriyan said...

//
மோகன் கந்தசாமி said...
சத்யப்ப்ரியன்,
இந்தி காரர்களின் அலும்பு பற்றி என் அனுபவத்தை இங்கு பாருங்கள்.
//
படித்து நன்றாக சிரித்து விட்டேன். உங்களுக்கு ஏற்பட்டது போலவே அனுபவம்தான் எனக்கு ஏற்படுகிறது. அட்டகாசமாக சொல்லி இருக்கிறீர்கள்.

//
வெள்ளையரின் ஒழுங்கீனம் சற்றும் சளைத்ததல்ல என்பது உண்மை.
//
சரியாக சொன்னீர்கள்.

//
அந்த வலைப்பூவில், தசாவதாரம் பற்றிய விவாதத்தில் ஆரம்பத்திலே உஷாராகி அழகாக எஸ்கேப் ஆகிவிட்டீர்கள். நாந்தான் அந்த மெண்டல் ஆஸ்பிட்டலில் இருந்து காம்போவுண்டு எகிறி குதிச்சு வரவேண்டியதா போச்சு.
//
:-) அடுத்தவர் கருத்தை மாற்றுவது நமது வேலை அல்ல. அந்த நேரத்தில் நமது சிந்தனையை இன்னும் சீராக்கி கொள்ளலாம் அல்லவா?

//
ச்சின்னப் பையன் said...
/எல்லாமே சூப்பரா எழுதியிருக்கீங்க...

மொத்தத்தில் பதிவு சூப்பர்...
/

ரிப்பீட்டே....
//
நன்றி ச்சின்னப் பையன். மாமனாருக்கு தரப்படவிருந்த டிக்கட் வாபஸ் பெறப்படுகிறது :-)

வெட்டிப்பயல் said...

//இத பார்க்கும் போது எனக்கு பிதாமகன் படத்துல கம்பெனின்னு சூர்யா சொல்றது தான் நியாபகம் வருது :-)//

LOL :-)

இந்த பாப் அப் விண்டோவை தூக்கிடலாமே...

SathyaPriyan said...

//
வெட்டிப்பயல் said...
இந்த பாப் அப் விண்டோவை தூக்கிடலாமே...
//
தூக்கிவிட்டேன் வெட்டி.

சின்னப் பையன் said...

:-))))))

CVR said...

//Demand Vs. Supply என்பது சரிவிகிதமாக இருக்கும் வரை அமெரிக்கர்கள் ஒழுங்கு முறைகளை சரியாக பின்பற்றுபவர்களே. ஆனால் அதில் ஒரு சிறு பாதிப்பு வந்தாலும் அவர்களின் ஒழுங்கீனம் நம்மவர்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல. அதே நேரத்தில் Demand Vs. Supply விகிதத்தை சரியளவில் நம்மவர்களுக்கு அளித்தால் நம்மவர்களும் ஒழுங்கு முறைகளை சரியாகவே பின்பற்றுவார்கள்.////

முற்றிலும் சரி!!
பல நாட்களாகவே இதை நான் யோசித்துக்கொண்டிருந்தேன்!!
Unless you have dustbins everywhere you can blame people abt throwing trash in public!!
நான் இரயிலில் சுண்டல் வாங்கினால் அந்த பொட்டல பேப்பரை போட குப்பைத்தொட்டி கிடையாது!!! தாம்பரம் இரயில் நிலையத்தில் இறங்கின அப்புறமும் எதுவும் பாக்க முடியாது!! நான் எனது பாண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்து குப்பைத்தொட்டியில் போடுவேன்!!
You can expect this awareness from everyone! i wont blame the people for throwing trash unless we develop a culture of dustbin usage!!
அதுக்கு you got to have enough dustbins in the first place!!

அதே மாதிரி!!
You cant blame some people doing nuisance in public unless you have usable public restrooms everywhere!!!
People like me,decency paathuttu,control pannittu varuvom!!
But when one gets out of home and stays away from home for hours,what can one do if there is no public restrooms???
awareness illana they will just follow the crowd!
Ozhungana foot path illana people get down on the streets and walk in the middle of road!! over a period of time they get used to it and it doesnt occur to them that they are doing something wrong!

Ellamae peer pressure thaan!!
Also the difference is,in US you ave to go out of the way to do some thing wrong!!
in India you have to be a reformist/elevated to soul to do something right!
things are so disorganised, that it is really really difficult if one wants to follow the rules for even a small thing!!
one cant keep fighting for EVERYTHING and sooner or later you have to follow the crowd!!

My thought is!!
உங்களால் முடிந்த வரை விதிகளை மதிக்க முயற்சி செய்யுங்கள்!
Go that extra mile,realising your social responsibility!!!
One cant conform to the rules 100%.Thats the sad reality of India!
---to be continued

CVR said...

For example!In east tambaram ,the entire left side of the road is a makeshift MTC bus stand and EVERYONE has to drive on the right side of the road!There,i cant play hide and seek between the buses and go on the left side of the road ,for the sake of following the rules!
I will be creating more nuisance than going on the right side of the road!! so i HAVE to break the rules there!
சரி சரி!! நான் விட்டா பேசிகிட்டே போவேன்!! பதிவு எழுத முடியாம ஆணிகள் குடுத்து டார்சர் பண்ணுறதால,பின்னூட்டத்துல பதிவு எழுத வேண்டிய நெலமையாகிடுச்சு!! :-(
நம்ம ஊருல வேலை பற்றிய mindset-உம் மாறனும்...
அது வேற ஒரு தனி டாபிக்!!!அதனால இப்போதைக்கு அப்பீட்டு ஆகிக்கறேன்....
மொக்கைக்கு மன்னிக்கவும்!!
bye!! :-)

கோபிநாத் said...

தல

சூப்பர் பதிவு ;)

\\அடுத்தது மொழி. எனக்கு ஹிந்தி தெரியாது என்று நாளிதழில் தான் விளம்பரம் செய்யவில்லை. அவ்வளவு முறை கூறியாகி விட்டது. இனி என்னிடம் ஹிந்தியில் பேசினால் தமிழில் பதில் கூறுவதாக முடிவெடுத்துள்ளேன். பார்க்கலாம்.\\


இவனுங்க இம்சை இங்கையும் தாங்க முடியல..

\\அவன் மட்டமான ரசனையுடன் இருப்பதினால் தான் உங்களால் "அறிவு ஜீவி" பட்டத்தை எளிதில் பெற முடிகிறது. அவர்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை என்பது முன்வரிசை ரசிகர்களுள் ஒருவனான எனது தாழ்மையான கருத்து.
\\

கலக்கல் பஞ்ச் ;))

SathyaPriyan said...

//
ச்சின்னப் பையன் said...
:-))))))
//
:-)

//
CVR said...
முற்றிலும் சரி!!
பல நாட்களாகவே இதை நான் யோசித்துக்கொண்டிருந்தேன்!!
Unless you have dustbins everywhere you can blame people abt throwing trash in public!!
நான் இரயிலில் சுண்டல் வாங்கினால் அந்த பொட்டல பேப்பரை போட குப்பைத்தொட்டி கிடையாது!!! தாம்பரம் இரயில் நிலையத்தில் இறங்கின அப்புறமும் எதுவும் பாக்க முடியாது!! நான் எனது பாண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்து குப்பைத்தொட்டியில் போடுவேன்!!
//
சரியாக கூறியுள்ளீர்கள். எல்லோரும் உங்களை போல இருப்பார்களா?

//
Also the difference is,in US you ave to go out of the way to do some thing wrong!!
in India you have to be a reformist/elevated to soul to do something right!
//
:-)

//
My thought is!!
உங்களால் முடிந்த வரை விதிகளை மதிக்க முயற்சி செய்யுங்கள்!
//
அதே அதே சபா பதே. வழிமொழிகிறேன். அவ்வளவு தான் நம்மால் செய்ய இயலும்.

//
For example!In east tambaram ,the entire left side of the road is a makeshift MTC bus stand and EVERYONE has to drive on the right side of the road!There,i cant play hide and seek between the buses and go on the left side of the road ,for the sake of following the rules!
//
செய்யவே செய்யாதீர்கள். மனித உயிர் சட்டத்தை விட உயர்ந்தது மேலானது.

//
சரி சரி!! நான் விட்டா பேசிகிட்டே போவேன்!! பதிவு எழுத முடியாம ஆணிகள் குடுத்து டார்சர் பண்ணுறதால,பின்னூட்டத்துல பதிவு எழுத வேண்டிய நெலமையாகிடுச்சு!! :-(
//
எழுதுங்க தல இப்படியாவது உங்க கருத்த படிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குது இல்லையா?

விரைவில் ஆணிகள் தொல்லை நீங்கும். கவலை வேண்டாம்.

//
கோபிநாத் said...
தல

சூப்பர் பதிவு ;)
//
நன்றி தல.

//
\அவன் மட்டமான ரசனையுடன் இருப்பதினால் தான் உங்களால் "அறிவு ஜீவி" பட்டத்தை எளிதில் பெற முடிகிறது. அவர்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை என்பது முன்வரிசை ரசிகர்களுள் ஒருவனான எனது தாழ்மையான கருத்து.
\
கலக்கல் பஞ்ச் ;))
//
நன்றி.

Deepa said...

//அடுத்தவர் ரசனையை மட்டம் என்று நினைப்பதை விட மட்டம் வேறு இருக்கவே முடியாது///

இவ்வளவு தெளிவா சொல்லியும் புரிஞ்சுக்க முடியலைன்னா... என்ன சொல்ல... !!


ரம்யா... டாங்க்ஸ்மா..

லேகா said...

பதிவுகள் யாவும் அருமை..நீங்க IT ஊழியர் என்று அறிகிறேன்..நானும் அப்படியே..வாசிபிற்கான தேடல் இருந்தால் எந்த துறையில் இருந்தாலும் வாழ்வை ரசிக்கலாம்..

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/

SathyaPriyan said...

//
Deepa said...
/அடுத்தவர் ரசனையை மட்டம் என்று நினைப்பதை விட மட்டம் வேறு இருக்கவே முடியாது/

இவ்வளவு தெளிவா சொல்லியும் புரிஞ்சுக்க முடியலைன்னா... என்ன சொல்ல... !!
//
சரியாக சொன்னீர்கள்.

//
ரம்யா... டாங்க்ஸ்மா..
//
:-)

முதல் வருகைக்கு நன்றி Deepa. தொடர்ந்து வாருங்கள்.

//
லேகா said...
பதிவுகள் யாவும் அருமை..
//
மிக்க நன்றி லேகா.

//
நீங்க IT ஊழியர் என்று அறிகிறேன்..
//
ஆமாங்க நான் IT ஊழியன் தான். :-) No brownies for guesses though :-)

//
நானும் அப்படியே..
//
நீங்கள் CTS மதுரையில் பணி செய்கிறீர்களா?

//
வாசிபிற்கான தேடல் இருந்தால் எந்த துறையில் இருந்தாலும் வாழ்வை ரசிக்கலாம்..
//
உண்மை. தொடர்ந்து வாருங்கள்.

Divya said...

\\அதே நேரத்தில் Demand Vs. Supply விகிதத்தை சரியளவில் நம்மவர்களுக்கு அளித்தால் நம்மவர்களும் ஒழுங்கு முறைகளை சரியாகவே பின்பற்றுவார்கள்.\\

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சத்யா,

மொத்தமாக பதிவு நல்லாயிருந்தது:))

Unknown said...

My main sadness came in when even my friend who knew hindi frowned when I requested him to change movie since it was hindi and I couldn't understand it (it wasn't a dvd to have sub titles)

SathyaPriyan said...

//
Divya said...
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சத்யா,

மொத்தமாக பதிவு நல்லாயிருந்தது:))
//
நன்றி Divya.

//
Arun S said...
My main sadness came in when even my friend who knew hindi frowned when I requested him to change movie since it was hindi and I couldn't understand it (it wasn't a dvd to have sub titles)
//
Sadly they take us for granted. Gone are the days when we tamilians used to go to Gujarat, Maharashtra, and other places in North India for employment.

With IT booming in South India many North Indian counterparts are coming to South for employment. It is becoming their necessity rather responsibility to learn the local language than expecting the localites to converse in their local language, in this case Hindi.

Vijay said...

\\அதே நேரத்தில் Demand Vs. Supply விகிதத்தை சரியளவில் நம்மவர்களுக்கு அளித்தால் நம்மவர்களும் ஒழுங்கு முறைகளை சரியாகவே பின்பற்றுவார்கள்.\\
உண்மைதான். ஆனாலும் சில அடிப்படை ஒழுக்கங்கள் கூட நம் மக்களிடம் இல்லையே. என்ன செய்ய? படித்தவர்கள், பல நாட்டுக்குப் போய் வந்தவர்கள் கூட ரோட்டில் துப்புகிறார்கள். சிக்னல் காத்திருக்காமல் சிகப்பு விளக்கு எரியும் போதே பின்னாலிருந்து ஹாரன் அடிக்கிறார்கள். இவர்களையெல்லாம் என்ன செய்ய?

\\இந்த ஹிந்திக்காரர்களிடம் பழகுவது என்பது தனி கலை என்றே நினைக்கிறேன்.\\
முற்றிலும் உண்மை. They have zero adaptability. My North Indian friend got a very good offer from a company in Chennai. He didn't take it, just because, the job was in Chennai. His argument, life is miserable in Chennai.
இவர்களெல்லாம், சென்னைக்கு வந்து தமிழகத்தைக் கெடுத்துவிடாமாலிருப்பதே நல்லது.

உங்கள் புகைபடங்கள் அனைத்தும் அபாரம். வாழ்த்துக்கள்.

SathyaPriyan said...

//
விஜய் said...
ஆனாலும் சில அடிப்படை ஒழுக்கங்கள் கூட நம் மக்களிடம் இல்லையே. என்ன செய்ய? படித்தவர்கள், பல நாட்டுக்குப் போய் வந்தவர்கள் கூட ரோட்டில் துப்புகிறார்கள். சிக்னல் காத்திருக்காமல் சிகப்பு விளக்கு எரியும் போதே பின்னாலிருந்து ஹாரன் அடிக்கிறார்கள். இவர்களையெல்லாம் என்ன செய்ய?
//
கவலை அளிக்கும் செயல் தான். ஆனால் அவர்களே சோற்றுக்கே வழி இல்லாதவனிடம் சென்று எச்சில் துப்பாதே தினமும் குளி என்றெல்லாம் அறிவுரை கூறுவார்கள். சுத்தத்தை பற்றி வகுப்பெடுப்பார்கள்.

அடுத்த ஓரிரு தலைமுறைகளில் இது நிச்சயம் மாறலாம். நல்லதே நடக்கும்.

//
They have zero adaptability. My North Indian friend got a very good offer from a company in Chennai. He didn't take it, just because, the job was in Chennai. His argument, life is miserable in Chennai.
//
Very true. Though I cannot generalize, most of them atleast are especially when it comes to deling with Southern India. Be it South Indians or South Indian Films or South Indian Stars or South Indian Cities. They think North is the only place people can live.

But the truth is most of the North eastern states and most parts of Interior UP, MP, Bihar or Orissa are very very backward.

//
இவர்களெல்லாம், சென்னைக்கு வந்து தமிழகத்தைக் கெடுத்துவிடாமாலிருப்பதே நல்லது.
//
:-)

//
உங்கள் புகைபடங்கள் அனைத்தும் அபாரம். வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி விஜய்.

Karthika said...

Seriya solli irukeenga intha Americans and Hindikaara makkal pathi. One thing I have noticed even though they know that we dont speak a word of Hindi, they'll still continue talking in Hindi itself....thirunthatha jenmangals....

Anyways, been busy at work lately, so haven't had a chance to read through all the posts, will do so each day.

- Karthika

Arunkumar said...

demand vs supply logic was good thala...
Thanksgiving அப்போ பாக்கணுமே கடிச்சி துப்பிர்பானுங்க கடைய....
dustbin நிரம்பி எல்லா குப்பையும் வெளிய தான் கெடக்கும் !!!

same is the case with traffic and cleanliness @ Times_square...


==================

//
"Do you dare to send me your question in email? I will show you why the fuck I am here."
//
adra sakka adra sakka :-)

=====================

reg "அறிவு ஜீவி" matter... oh ivanungala...

keanu reaves engayo gymnastics kathukittu vandhu "bullet" varumbodhu pinnadi sanjaarna semaya kai thattuvaanunga....

adhaye captain vayithula archanai thattu kattittu bulleta reverse-la anuppinaarna vilundu vilundu sirippanunga... idhukku sirikkira naayi adhukkumla sirichirkanum?

vellaikaran edhu senjaalum kaiya thattidradha?

Anandha Loganathan said...

//"Why the fuck you are in India when you don't know Hindi?" என்றான். எனக்கு வந்ததே கோபம். நான் "Do you dare to send me your question in email? I will show you why the fuck I am here." என்றேன். அதை கேட்டு வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சென்றவன் தான். அதன் பிறகு என்னிடம் வருவதில்லை.//

அவன் மட்டும் அல்ல அநேகம் பேர் இப்படி தன் இருக்க்கிறார்கள். இது அவர்களின் ஈகோவை மட்டுமே பிரதிபலிக்கின்றது. அவர்கள் கூறும் மட்டுறு வார்த்தை வெள்ளக்காரன் இந்தியாவை விட்டு போய்த்தான் ஆனால் நீ இன்னும் அந்த இங்கிலீஷ்
கட்டி கொண்டு அழுகிறாய். இது இந்தியாவில் நடந்தது. ஆனால் US வந்து வருடங்கள் ஆகியும் இன்னும் ஆபீஸில் அவங்க இந்தி தான் பெசுரான்ங்க.

இன்னும் பல பேருக்கு இங்கிலீஷ் , national languagennu சொல்றாங்க. கீழே ஒரு லிங்க் இருக்கு அதில் ஐஸ்வர்யா ராய் , said Hindi is National language.

http://www.youtube.com/watch?v=TbAHD-c6AQA&feature=related

Somebody needs to educate these insane, moron people. இல்லாகாட்டி இந்தி தான் தேசிய மொழின்னு சொல்வாங்க.

Pon Paulraj said...

/
Demand Vs. Supply என்பது சரிவிகிதமாக இருக்கும் வரை ...../

Great thought! me too have felt this many times.

btw Good blog; great thinking ; Congratulations!!!

/

SathyaPriyan said...

//
Karthika said...
Anyways, been busy at work lately, so haven't had a chance to read through all the posts, will do so each day.
//
மெதுவாக படித்துவிட்டு வாருங்கள்.

//
Arunkumar said...
demand vs supply logic was good thala...
//
நன்றி தல.

//
keanu reaves engayo gymnastics kathukittu vandhu "bullet" varumbodhu pinnadi sanjaarna semaya kai thattuvaanunga....

adhaye captain vayithula archanai thattu kattittu bulleta reverse-la anuppinaarna vilundu vilundu sirippanunga... idhukku sirikkira naayi adhukkumla sirichirkanum?
//
அதற்கு நம்மவர்களின் Inferiority Complex தான் காரணம். வேறு என்ன?

//
Anandha Loganathan said...
ஆனால் US வந்து வருடங்கள் ஆகியும் இன்னும் ஆபீஸில் அவங்க இந்தி தான் பெசுரான்ங்க.
//
அந்த ஒரு விஷயத்தில் நான் அவர்களை பாராட்டுகிறேன். இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் கூட தெளிவாக ஹிந்தி பேசுகிறார்கள். ஹிந்தி படம் பார்க்கிறார்கள். இந்திய அரசியல் பற்றி விவாதிக்கிறார்கள். ஆனால் நம்மவர்களின் குழந்தைகள்? கேட்கவே வேண்டாம். தமிழ் புறிந்து கொண்டாலே பெரிய அதிசயம். :-(

//
Pon Ganesh Kumar said...
Great thought! me too have felt this many times.

btw Good blog; great thinking ; Congratulations!!!
//
Thank you so much.

Mohan said...

One of my friend said that during evening peak hours at VRE station in Bristow, VA you could see same things (like East Falls Church station on that day) happening everyday.

SathyaPriyan said...

//
Saradha said...
One of my friend said that during evening peak hours at VRE station in Bristow, VA you could see same things (like East Falls Church station on that day) happening everyday.
//
:-)